கம்பம் கம்பராய பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோவில் ஆலய கும்பாபிஷேக ஆலய திருப்பணிக்காக ரூபாய் 1 லட்சம் நன்கொடை வழங்கிய திமுக நகரச் செயலாளர்
தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர் திருக்கோவில் ஆலய கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெற உள்ளது இந்த கும்பாபிஷேக திருப்பணிக்காக கம்பம் வடக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற கவுன்சிலர் சுந்தரி வீரபாண்டியன் ஆகியோர் குடும்பத்தினர் சார்பாக ரூபாய் 1 லட்சம் நன்கொடையாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ தேனி மாவட்ட அறங்காவலர்கள் தலைவர் கே.ஆர். ஜெய பாண்டியன் தொழிலதிபர் கே.வி.பி. முருகேசன் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் எம் சி வீரபாண்டியன் குடும்பத்தினர் கம்பம் ஸ்ரீகுமார் ஆர்த்தி பேக்கரி அதிபர் ஸ்ரீகுமார் ராஜேந்திரன் மற்றும் நகர பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்