கரூர் செய்தியாளர் மரியான் பாபு
“மிஸ் வேகன்ஸா” பரணி வித்யாலயா“மிஸ்டர் எக்ஸ்ட்ரா வேகன்ஸா” பரணி பார்க்..
சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இளைஞர் அமைப்பான கரூர் மாவட்ட ரோட்ராக்ட் சங்கம் சார்பில் 29-ஆம் ஆண்டு கலைத்திருவிழா (எக்ஸ்ட்ரா வேகன்ஸா) அண்மையில் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 20 பள்ளிகள் பங்கு பெற்ற கலைத்திருவிழாவில் பரணி வித்யாலயா மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர். மேலும் பரணி பார்க் பள்ளி ஒட்டு மொத்த மூன்றாமிடம் வென்று சாதனை படைத்தது.
இதில் பரணி வித்யாலயா மாணவி கார்த்திகாஸ்ரீ “மிஸ் எக்ஸ்ட்ரா வேகன்ஸா” பட்டமும், பரணி பார்க் சந்துரு “மிஸ்டர் எக்ஸ்ட்ரா வேகன்ஸா” பட்டமும் பெற்றனர். பரணி வித்யாலயா தனி நபர் இசைக்கருவி வாசித்தல், ஓவியப்போட்டி, தமிழ் கட்டுரைப்போட்டியில் முதலிடமும், தமிழ் பேச்சுப்போட்டி, தனி நபர் வாய்ப்பாட்டில் இரண்டாமிடமும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். பரணி பார்க் நடனம், கட்டுரைப்போட்டியில் முதலிடமும் தனிநபர் இசைக்கருவி வாசித்தலில் இரண்டாமிடமும் அறிவியல் கண்காட்சி, ஓவியம், கனசதுரம் சேர்த்தலில் மூன்றாமிடமும் பெற்று ஒட்டு மொத்த மூன்றாமிடத்தை வென்றனர்.
மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற பரணி பார்க் கல்விக் குழும மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் மாவட்ட அளவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற பரணி மாணவ, மாணவியர்களையும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்ரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி, துணை முதல்வர் ரா.பிரியா, ஒருங்கிணைப்பாளர் ஜெர்லின் கிரிஸ்டல், பரணி பார்க் முதல்வர் க.சேகர், துணை முதல்வர் நவீன் குமார், ஒருங்கிணைப்பாளர்கள் பானுப்பிரியா, கணேசன், ஆசிரியர்களைப் பாராட்டி பரிசளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரிய,ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.