குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து கானொலி காட்சி வாயிலாக உயர்கல்வித் துறை சார்பில் கடலூர் மாவட்டம், வடலூர் பார்வதிபுரத்தில் ரூ.13.71 கோடி மதிப்பீட்டில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நேற்று திறந்து வைத்ததை தொடர்ந்து, வடலூரில்,தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,தலைமை தாங்கி,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர்எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி மாணவர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில்வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவிக்கையில்,தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்,ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், குறிப்பாக அனைவரும் உயர்கல்வியினை அடையும் நோக்கிலும் பல்வேறு வகையான சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த சந்தேகங்களை போக்குவதற்காகவும், ஒவ்வொரு மாணவரும் தனக்கென ஒரு உயர்கல்வியினை எவ்வாறு தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அனைத்து வகையான தகவல்களையும் வழங்கிடும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் கட்டாயம் உயர்கல்வி அடைய பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற அடிப்படையிலும், அனைவரும் உயர்கல்வியினை அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் மாதந்தோறும் ரூ.ஆயிரம்வழங்கும் புதுமைப் பெண்திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறார்கள்.

நமது நிருவாகத்தின் சார்பில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக கடந்த ஆண்டில் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டமானது மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் தரவரிசையில் 5ஆவது இடம் பெற்று சிறந்து விளங்குகிறது.


மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி அடைய வேண்டும் என்ற அடிப்படையில் புதிய அரசு கல்வி நிறுவனங்களை பல்வேறு இடங்களில் ஏற்படுத்தி வருவதுடன், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் குறிஞ்சிப்பாடியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமையவேண்டும் என்று நான் வைத்த கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றும் வகையில் 22.06.2022 அன்று முதல் வடலூர்பார்வதிபுரம் பகுதியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் பல்வேறு பாடபிரிவுகளுடன் மாணவர்களின் நலனுக்காக கானொலி காட்சிவாயிலாக தொடங்கிவைத்தார்.

கல்லூரிக்கு நிரந்தரகட்டடம் மாணவர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதியுள்ள இடத்தில் அமையவேண்டும் என்ற அடிப்படையில் தற்காலிக கட்டடத்திற்கு அருகே நிலம் ஒதுக்கப்பட்டு இப்புதிய கட்டடம் கட்டப்பட்டு இன்றைய தினம் தொடங்கிவைக்கப்பட்டது. தற்போது இக்கல்லூரியில் பயிலும் 505 மாணவிகள், 272 மாணவர்கள் என மொத்தம் 777 மாணவ,மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
பார்வதிபுரத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கல்லூரி தரைதளம் 1597.36 ச.மீ பரப்பளவில், இரண்டு வகுப்பறைகள், முதல்வர் அறை,அலுவலகஅறை, ஒன்றும் மாணவர் பண்டகசாலை அறை, ஒன்றும் பதிவு அறை, இரண்டுதுறை தலைவர்கள் அறை , ஒரு நூலகஅறை, ஒருநூலகர் அறை, ஒருபொருள் வைப்பறை, ஒருஆய்வக அறை மற்றும் கழிவறை வசதிகளுடளும், முதல் தளம் 1529.00 ச.மீ பரப்பளவில் ஆறு வகுப்பறைகள், இரண்டுதுறை தலைவர்கள் அறை, ஒரு ஆசிரியர்களுக்கான அறை, ஒரு கணினி அறை, ஒரு கருத்தரங்கு அறை, ஒருஆய்வக அறை மற்றும் கழிவறை வசதிகளுடளும், இரண்டாம் தளம் 1529.00 ச.மீ பரப்பளவில் ஆறு
வகுப்பறைகள், ஒருஉடற்கல்வி இயக்குனர் அறை, ஒரு ஆசிரியர்களுக்கான அறை, மூன்று ஆய்வக அறைகள் மற்றும் கழிவறை வசதிகளுடளும் மொத்தம் 5.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.13.71 கோடி மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை அம்சங்களுடன் காற்றோட்டமான சூழலில் கட்டப்பட்டுள்ளது, என அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில்,மாவட்ட கல்வி குழுத்தலைவர் இன்ஜீனியர் சிவகுமார், வடலூர் நகரமன்ற,தலைவர் சிவக்குமார்,பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன்,நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர மன்றதுணைத்தலைவர் சுப்புராயலு, கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் முனைவர்மலர், திட்டங்கள் கோட்டம், தஞ்சாவூர் செயற்பொறியாளர் சிவகுமார், வடலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் வண்ணமுத்து, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *