மன்னார்குடி.
58வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் கிளை நூலகத்தில் வாசிப்பு இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தேசிய மேல்நிலைப்பள்ளியின் கப்பற்படை என்சிசி மாணவர்கள் 80 பேரும் நூலகத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர் முன்னதாக நடைபெற்ற வாசிப்பு இயக்க நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். திலகர் தலைமை வகித்தார். என்சிசி அதிகாரி முனைவர்.எஸ். அன்பரசு, தமிழாசிரியர் டி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் வ. அன்பரசு வரவேற்புரை ஆற்றினார்.
வாசிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நல்நூலகர் த. செல்வகுமார் பேசும்போது… நூலக பஞ்சசீலமான, “நூல்கள் படிப்பதற்கே, ஆளுக்கு ஒரு நூல், நூலுக்கு ஒரு ஆள், காலம் கருதுக, நூலகம் வளரும்” ஆகியவற்றை விளக்கிப் பேசினார்.
மன்னார்குடி கிளை நூலகத்தில் 30 தலைப்புகளில் 63,000 நூல்கள் உள்ளன, சராசரியாக ஒரு நாளைக்கு 150 பேர் நூலகத்திற்கு வருகை புரிவதாகவும் 100க்கும் மேற்பட்டோர் போட்டி தேர்வுகளுக்காக முழு நேரமாக நூலகத்தை பயன்படுத்தி பயிற்சி பெற்று வருவதாகவும் கூறினார்.
முன்னதாக என்சிசி மாணவர்களுக்கு மெய்நிகர் நூலக அறிமுகம் செய்யப்பட்டது, நிறைவாக மூன்றாம் நிலை நூலகர் வீ.ராஜா நன்றி கூறினார்.