திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் அரங்கில் அதிமுக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளருமான ஆர்.காமராஜ் திமுக இன்று பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார்கள் 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயத்தில் இருக்கிறார்கள்.
நாம் கட்சியை இன்னும் பலமாக வலுப்படுத்த வேண்டும். கட்சியில் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட இருக்க கூடாது. அப்படியே ஒன்று கூடி இயக்கத்திற்கு வரவேண்டும். இதற்கு அடித்தளம் என்ன என்று சொன்னால் இந்த எஸ்ஐஆர். எஸ்ஐஆரின் நோக்கம் என்னவென்றால் இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும்.
இடமாற்றம் செய்தவர்கள் பழைய பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருக்க கூடாது . உண்மையான வாக்காளர்கள் வரவேண்டும் என்பது நோக்கத்தில் தான் SIR பணி நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது எனப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் கழக அமைப்புச்செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்.வாசு கிராம் , மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம் , கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் , கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா சேட் , உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .