வேப்பூர் செப்.5

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, பெண்ணாடம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி மகன் அழகானந்தம் வயது (45) இவருக்கு திருமணமா.கி அலமேலு என்ற மனைவியும்,ஒரு மகன் தமிழ்மாறன் கிருபாஸ்ரீ என்ற மகளும்
உள்ளனர்.

இந்நிலையில் அழகானந்தம் உழவுப் பணி செய்ய தனது விவசாய நிலத்தைப் பார்ப்பதற்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் தாக்கியதில் அழகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல், அப்பகுதியில் பெய்த மழைக்காக அங்குள்ள ஒரு வேப்பமரத்தடியில் ஒதுங்கிய அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சத்தியராஜ் (வயது35), செல்லதுரை மகன் ராம்குமார் (வயது26) மற்றும் தீவலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து ஆகிய மூவர் மீதும் இடி தாக்கியது. இதில் அவர்கள் உடல் பாதிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.
இதனால் மூவருக்கும் கை கால்கள் செயல் இழந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இடி தாக்கிய தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற பெண்ணாடம் போலிசார் உயிரிழந்த விவசாயி அழகானந்தத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *