தென்காசி மாவட்ட பால் பண்ணை ஒன்றியம் அமைக்க வேண்டும் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் பால் பலத்துறை சார்பில் பால்பண்ணை ஒன்றியம் அமைக்க வேண்டும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை மனு கொடுத்துள்ளார் .

அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில்
மாவட்ட கூட்டுறவு பால் பண்ணை ஒன்றியம் திருநெல்வேலியில் செயல்பட்டு வருகிறது. முன்பு தூத்துக்குடி மாவட்டமும் திருநெல்வேலி மாவட்டமும் இந்த பால்பண்னை ஒன்றியத்துடன் சேர்ந்திருந்தது. அது கடந்த ஆட்சிக் காலத்தில் தனியாக பிரிக்கப்பட்டு தூத்துக்குடியில் தனி ஒன்றியமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது தென்காசி மாவட்டத்திற்கும் சேர்த்து திருநெல்வேலியில் பால்பண்ணை ஒன்றியம் இயங்கி வருகிறது. ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தென்காசிக்கு தனியாக மாவட்ட கூட்டுறவு பால்பண்னை ஒன்றியம் அவசியம் தேவை என்றும் அதற்கான சாத்தியகூறுகள், இருப்பதையும் அதிகமான கூட்டுறவு பால் பண்ணைகள் அதிகமான பால் உற்பத்தி தென்காசி மாவட்டத்தில் இருப்பதையும் தனி ஒன்றியம் தேவை என்பதை வலியுறுத்தி மனு கொடுத்து அந்த மனு தற்போது ஆய்வில் இருந்து வருகிறது.

தென்காசி மாவட்டத்திற்கு மாவட்ட கூட்டுறவு பால் பண்ணை தனி ஒன்றியம் அமையும் பட்சத்தில் கீழப்பாவூர் ஒன்றியம் ஆண்டிபட்டி ஊராட்சியில் அரசு நிலம் உள்ளது. அதே போல் கால்நடை துறைக்கு பாத்தியப்பட்ட நிலம் ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளது.

ஆகையால் அமைச்சர் அருள்கூர்ந்து தனியாக தென்காசி மாவட்டத்திற்கு தனி மாவட்ட கூட்டுறவு பால் பால் ஒன்றியம் ஆய்வில் இருப்பதை ஆய்வு செய்து விரைந்து தென்காசி மாவட்டத்திற்கு தனியாக மாவட்ட கூட்டுறவு பால் பண்ணை ஒன்றியம் அமைத்திட ஆணை பிறப்பித்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *