மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் மதுக்கடை நடத்துவதை உடனடியாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதுக்கடையை அகற்றும்
மதுரை மாவட்ட ஆட்சியர்உத்தரவை அமல்படுத்தி கோரியும் அப்பகுதியில் தொடரும் விபத்துகளைத் தடுத்திடக் கோரியும், விரகனூரில் குடிநீர் வழங்காமல் வரி விதிப்பதைக் கண்டித்து குடிநீர் வழங்கிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம், விரகனூர் மந்தை திடலில் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விரகனூர் கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சி.பி.எம் கிளைச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கலைச்செல்வன், அவனியாபுரம் பகுதிக்குழு செயலாளர் சேதுராமு பகுதிக்குழு சி.பி.எம் நிர்வாகி போஸ், முருகன் கிருஷ்ணாதேவி ஆகியோர் பேசினார்கள். நிறைவு செய்து வைத்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாலா பேசினார்.