தேனி மாவட்டம் கம்பம் நகரில் காந்தி சிலை அருகே அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வ.உசிதம்பரனார் 155 ஆவது பிறந்தநாளையொட்டி தேனி தென்மேற்கு மாவட்ட கழக செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் .
இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ சொந்த செலவில் அறுசுவை சைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கட்சியின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.