தேனியில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் கூட்டுறவுத் துறையின் சார்பில் நடைபெற்ற 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1141 பயனாளிகளுக்கு 11.16 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் தேனி நகராட்சி நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் திட்ட குழு உறுப்பினர் எம்.சி.நாரயணபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்