காரைக்கால் வரிச்சிக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இதில் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 370 பேர் கலந்து கொண்டனர்.

ப்ரீ ஜூனியர், ஜூனியர், சீனியர், ஹைஸ்பீடு ஆகிய பிரிவுகளில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலம் இரண்டாம் பேப்பர் ஜூனியருக்கு 45 நிமிடங்களும், சீனியருக்கு ஒரு மணி நேரமும் தேர்வு நடந்தது. முதல் பேப்பர் மற்றும் உயர் வேகத்திற்கு பத்து நிமிடங்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டது.

பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரும், தலைமை கண்காணிப்பு அதிகாரியுமான முனைவர் டி. சந்தனசாமி மற்றும் நாகை ஏ.டி.ஜே.தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரும், கூடுதல் தலைமை கண்காணிப்பு அதிகாரியுமான டி.அன்புலிங்கம் ஆகியோர் தலைமையில் தட்டச்சு தேர்வுகள் நடைபெற்றன.

S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *