புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. தி.மு.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கோபால் தலைமையில் லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தி.மு.க–.வினர் கேக் வெட்டினர். நிகழ்ச்சியில் உருளை யன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று சிவா எம்.எல்.ஏ.வுக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, உருளை யன்பேட்டை தொகுதி தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தாமரை க்கண்ணன் ஏற்பாட்டில், கண்டாக்டர் தோட்டம் பகுதியில் உள்ள 250 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார். மாநில துணை அமைப்பாளர் தைரிய நாதன், தொகுதி செயலாளர் சக்திவேல், தொகுதி அவைத்தலைவர் ஆதி நாராயணன், பொரு ளாளர் சசிகுமார், கிளைச் செயலாளர் பிரகாஷ், ராஜா, ராமலிங்கம், பன்னீர், சீனு, வெங்கடேசன், சதீஷ், கபாளி, யுவராஜ், பரத், ஸ்ரீ, விஜய், யோகீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *