செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம்
தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து பேரணியாக தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் நலச்சங்கம் வாழ்க என கோஷமிட்டபடி தனியார் திருமண மண்டபத்தில் முதல் மாநில மாநாடு மாநில தலைவர்குணசேகரன் தலைமையில்மாநில பொதுச்செயலாளர் காசிமற்றும் மாநில பொருளாளர்ஷர்புதீன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


அதில் தற்போது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்து
பொறுப் பேற்றிருக்கும்மாவட்ட பொறுப்பாளார்களுக்கு இம்மாநில மாநாட்டில் அனைவரின் மனப்பூர்வமான சம்மதத்துடன் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றபடுகிறது.
தற்போது பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட,மாநில பொறுப்பாளர்கள்இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பில் செயல்படுவார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து புதிய நிர்வாகிகள் செய்யப்படுவார்கள்.மாநில பொறுப்பாளராக போட்டியிட விரும்பும் நபருக்கு வாக்களிக்க உரிமையுள்ள 10 உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும்.மாவட்ட பொறுப்பாளராகபோட்டியிட விரும்பும் நபருக்கு வாக்களிக்க உரிமையுள்ள5 உறுப்பினர்கள் முன்மொழியவேண்டும். மாநில, மாவட்ட, பொறுப்பாளர்களை நீக்கும்அதிகாரம் மாநில பொதுக்குழுவிற்கு மட்டுமே உண்டு. சங்க வளர்ச்சிக்காக ஆண்டு சந்தா தொகை ரூ.500/-ன நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது,

சந்தா தொகை முழுவதும் மாநில செயற்குழு ஒப்புதலுடன் மாநில பொருளாளர் மட்டுமே நிர்வகிகிப்பார்.எந்தவித செலவினங்களும் மாநில செயற்குழு ஒப்புதலுடனே செய்யப்படவேண்டும். இம்மாநாட்டின் மூலம்மூன்று நிதி உதவித் திட்டங்கள் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது,

உறுப்பிணர்களின் ஆண்டு சந்தா தொகையில் இருந்து ஒரு ஆண்டுக்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக உள்ள நபரின் அல்லது அவரது மகன், மகள் அல்லது உடன்பிறந்த சகோதரர், சகோதரியின் திருமணத்திற்குரூ. 10 ஆயிரம் நிதிவழங்கப்படும்.

அவரது குடும்ப நிகழ்ச்சிகளான காதணி விழா, கிரஹப்பிரவேசம், மஞ்சள்நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரூ.5ஆயிரம்உறுப்பினர்கள் ஒரு முறை அளிக்கும் பங்குத்தொகையுடன் கூடுதலாக ஆயிரம் ரூபாய் வசூலித்து தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம்” என்ற பெயரில் ஒரு கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டு உறுப்பினர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் வரை கடன் வழங்கப்படும்.

இத்தொகை மாதம் ரூ.11000/- வீதம்10 மாதங்களில் செலுத்தி கடன் தொகையை அடைக்க வேண்டும்.கடன் பெறும் நபர் கடன் சங்கத்தில் பங்குதாரராக இருக்க வேண்டும்.ஒரு ஆண்டுக்கு மேல் தொடந்து உறுப்பினராக இருக்கும் நபரின் எதிபாராத விதமாக ஏற்படும்இறப்பிற்கு ஒவ்வொருஉறுப்பினரும் 500ரூபாய் செலுத்தி
ரூ.5 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும்.
இத்தொகையில் இறுதிச்சடங்கன்றே50 ரூபாயும் மீதித்தொகை 4லட்சத்து ஐம்பதாயிரத்தை 15 நாட்களுக்குள் வழங்கப்படும்.

மற்றும் மருத்துவநிதி வழங்குவது என தீர்மானம் நிறேவேற்றப்பட்டது.மேலும் வெல்டிங் தொழிலை சிறு,
குறு தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியத்துடன்
நிதி உதவியை அளிக்க வேண்டும்.வெல்டிங் பட்டரைக்கான மின்
கட்டணம் செலுத்த மானியம்அளிக்க வேண்டும் என
வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்போவதாக முடிவெடுக்கபட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *