தஞ்சாவூர் ஏவிபி. அழகம்மாள் நகர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பாக 58ஆவது தேசிய நூலக வார விழா மற்றும் 73ஆவது வார தொடர் இலக்கிய ஆர்வலர்கள் அமர்வு நிகழ்ச்சி அழகம்மாள் நகரில் உள்ள கிளை நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்ப் பல்கலைக்கழகம், அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, இணைப் பேராசிரியர்,முனைவர் இரா. இந்து அவர்கள் “அக்காலம் இக்காலம் நூலகம்” என்ற தலைப்பில் அற்புதமான சிந்தனைமிக்க உரையை நிகழ்த்தினார்.
தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழக முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளுடன் கவிதை மற்றும் சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள் முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் கோ.தனபாலகிருஷ்ணன் வரவேற்றார்.நிறைவில் திருமதி மு.சாரதா, நன்றி கூறினார். இதில்கவிஞர்கள், முனைவர்கள், சான்றோர்கள், நூலக ஆர்வலர்கள், மாணவர்கள், நிர்வாகிகள் மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்