செல்வகுமார் சீர்காழி செய்தியாளர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் சார்பில் சீர்காழி நகர புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சந்தானம் தலைமையில் நடைபெற்றது மாவட்டம் பொதுச் செயலாளர் சன்சிராஜா முன்னிலை வகித்தார் .

மாவட்ட பொருளாளர் செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார் தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளர் கடலூர் முத்து அவர்கள் புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

புதிய பொறுப்பாளர்களாக நகரத் தலைவர் ஆக ரஜினிகாந்த்தும் நகர செயலாளராக பாலாவும் நகர பொருளாளர் முரளி துணை செயலாளர்கள் செந்தில். ராஜ் குகன். நகர துணைத் தலைவர் ரமேஷ் கௌரவத் தலைவராக மோகன இளங்கோ ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர் . அதன் பின் அவர்களுக்கு சங்கத்தின் சட்ட திட்டங்கள் சங்கத்தினை எவ்வாறு நடத்த வேண்டும் என்று விதிமுறைகளை கூறி சிறப்புரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் அவருடன் மயிலாடுதுறை நகரத் தலைவர் அஜய்குமார் மாவட்ட பிரதிநிதி சிவக்குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மேஸ்ட்ரோ வீடியோ ஜீவானந்தம் மோகன் ஜி குரு மற்றும் விக்னேஷ் ஸ்டுடியோ வடிவேல்,வள்ளுவகுடி பிரபு, தீவு குமார், பூம்புகார் பீட்டர் திருமுல்லைவாசல் பாலாஜி ஸ்டுடியோ முருகன் கொள்ளிடம் ஒன்றியம் பெரம்பூர் ரவினா ஸ்டுடியோ ராபர்ட் முன்னாள் பொருளாளர் பாபர் அலி மற்றும் கடலூர் மாவட்ட தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது ஒத்துழைப்பு அளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவித்தர்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *