அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் பிரிவிலிருந்து மீனாட்சிபுரம் வழியாக அ.கோவில்பட்டி வரை உள்ளதார் சாலையை பழுதுபார்க்கும் பணிக்கான பூமி பூஜை மீனாட்சிபுரத்தில் கிராமத்தில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ்,முத்தையன் பரந்தாமன்,அருண்,நகர செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சாமிநாதன்,நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் கவுதம்,முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், திமுக கிழக்கு ஒன்றிய பொருளாளர் முடுவார்பட்டி சுந்தர்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனுஷ்கோடி,காயத்ரிஇதயச்சந்திரன், சுந்தர்ராஜன்,ஊராட்சி செயலாளர் இளமாறன்,ஆதனூர் முருகன்,ஒப்பந்ததாரர் ஆதிசங்கர்,மற்றும் பிரதாப்,யோகேஷ், சதீஷ், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு பழுதுபார்க்கும் நிதி திட்டத்தின் கீழ் 3. கி.மீ.தூரத்தில் ரூ 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் இந்த பணிகள், நடைபெற உள்ளது.