நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழியனுப்பு விழா
நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு சப்-ஜூனியர் அட்டையா பட்டயப் போட்டியில் தேர்வாகி, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு வாழ்த்து மற்றும் வழியனுப்பு விழா நடைபெற்றது.
தேசிய அளவிலான போட்டி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வரும் அக்டோபர் 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களை தயார்படுத்தும் வகையில், செப்டம்பர் 26 முதல் 30-ஆம் தேதி வரை சென்னையில் சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள உள்ள நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பேச்சிமுத்து மற்றும் கங்கை அமரன் ஆகியோரை, பள்ளியின் தலைமை ஆசிரியர் தபசு முத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
நிகழ்வின்போது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முனைவர் பெரியதுரை உடனிருந்தார். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் சிறப்பாக விளையாடி பள்ளிக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் வாழ்த்தினர்.