மேட்டுப்பாளையத்தில் உதகைக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை நடைமுறைக்கு வந்தது.

நீலகிரி, கொடைக்கானல் போன்றஇயற்கை எழில் நிறைந்த சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை கண்டறியவும்,மேலும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறதா என்பதை கண்டறியவும் இ -பாஸ் நடைமுறையை முதல் அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து நீலகிரி மாவட்டவருவாய்த்துறையினர், போக்குவரத்து துறையினர்,காவல் துறையினர் இணைந்து இ- பாஸ் நடைமுறையை அமல்படுத்த தீவிரமாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதற்காக மேட்டுப்பாளையம்உதகை தேசிய நெடுஞ்சாலையில் கல்லாறு அருகே சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது,

இங்கு நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் தவிர அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு இ-பாஸ் கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா இ- பாஸ் நடைமுறையைகல்லாறு சோதனை சாவடியில் ஆய்வு செய்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *