கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தை சேர்ந்த மித்ரன் எனும் சிறுவன்,ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில் 15 கிலோ மீட்டர்,ஓடிய படி 11,520 தடவை சிலம்பம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்..

கோவை சின்ன வேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் ஐந்து வயது முதலான மாணவ மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம் , அடிமுறை , வேல்கம்பு , வாள்வீச்சு , வளரி மான்கொம்பு , சுருள்வாள் , வாள்வீச்சு,போன்ற , பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத் தரப்பட்டு வருகிறது.மேலும் இங்கு நன்கு பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகள் பலர் பல்வேறு உலக தொடர்ந்து நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில் இதே பயிற்சி கழகத்தில், பயிற்சி பெற்று வரும் குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்த,தமிழ்செல்வன்,பிரியா ஆகியோரின் மகன் மித்ரன்.ஏழு வயதான சிறுவன் மித்ரன் ஒற்றை சிலம்பத்தை 15 கிலோ மீட்டர் ஓடிய படி ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில்,11,520 தடவை தொடர்ந்து சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார்.இதற்கான நிகழ்ச்சி குரும்ப பாளையம் ஆதித்யா குளோபல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..சாதனை நிகழ்வை எஸ்.எஸ்.குளம் ஊராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி,ஒண்பதாவது வார்டு கவுன்சிலர் மோகன்,இந்தியா,யூரோப்பியன் மற்றும் அமெரிக்கா உலக சாதனை புத்தகங்களின் துணை தலைவர் வி.கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்…
சிறுவன் மித்ரன் செய்த இந்த சாதனை,இந்தியா உலக சாதனை,அமெரிக்கன் உலக சாதனை,யூரோப்பியன் உலக சாதனை என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது..
சாதனை மாணவன் மித்ரனுக்கு, இந்தியா,யூரோப்பியன்,அமெரிக்கன் உலக சாதனை புத்தகங்களின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் கோப்பை,பதக்கம்,மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்..இந்நிகழ்ச்சியில்,ஆதித்யா குளோபல் பள்ளியின் முதல்வர் விஜய பிரபா,லிட்டில் லேம்ப் நர்சரி பிரைமரி பள்ளியின் தாளாளர் ஷீலா,ஸ்ரீ கிட்ஸ் ப்ளே ஸ்கூல் முதல்வர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்..சாதனையாளர் மித்ரனுக்கு,
இந்தியா,யூரோப்பியன்,அமெரிக்கன் உலக சாதனை புத்தகங்களின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவரான சதாம் ஹீசேன் பாராட்டுகளை தெரிவித்தார்…
காலை ஆறு மணிக்கு துவங்கிய இந்த .சாதனை நிகழ்ச்சியில் முல்லை தற்காப்பு கலை துணை பயிற்சியாளர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மித்ரனை உற்சாகபடுத்தினர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *