பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவொற்றியூர் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கப்பட்டது.
பிறந்த குழந்தைகளுக்கான செல்வ மகள் மற்றும் முத்ரா வங்கி திட்டங்களில், தமிழகம் முதன்மை வகிக்கிறது. மற்ற நாடுகள் இந்தியா மீது நம்பிக்கை வைக்கிறது. ராகுலுக்கு மட்டும் நம்பிக்கை வராது. பா.ஜ., எதிர்ப்பே இல்லாமல் எப்படி ஆள முடியும் என கேட்கிறார். அதற்கு நீங்கள் பா.ஜ., வில் சேர்ந்தால் தான் தெரியும்.
ராகுல் உள்ளிட்டவர்கள் தேர்தல் கமிஷனரை குறை சொல்கின்றனர். தமிழகத்தில், 70 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு, கட்சிகளின் பாக முகவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வெற்றி பெற முடியாத விரக்தியில் இப்படி பேசுகின்றனர்.
தமிழக முதல்வர், மக்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. கொலை – கொள்ளை அதிகளித்துள்ளது. ஊழல் தலை விரித்தாடுகிறது. தனியாக ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம். ஆனால், ஒட்டுமொத்தமாக எம்.எல்.ஏ., க்களை விலைக்கு வாங்குவோம் என்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க., – பா.ஜ., ஒன்று என, குழப்பமான கருத்துகளை சொல்லி வருகிறார். பா.ஜ., வை குறை சொல்ல ஒன்றுமில்லை. தன்னை சங்கி என சொல்லி விட போகின்றனர் என்பதால், ஏதோ ஒன்றை சொல்லி வருகிறார்.
காங்கிரஸ் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர், நான்தான் முதலில் கொண்டு வந்தேன் என்கிறார். அது சிறுமிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக அல்ல. பேரம் பேசுவதற்காக தான். சுயலாபத்திற்காக தான் இதை வெளி கொண்டு வந்துள்ளார். இந்த வழக்கில் யாராக இருந்தாலும், தப்பிக்க கூடாது. தண்டிக்கப்பட வேண்டும்.
பிரசாரத்தில், பெட்டியே வாங்கவில்லை என, மரகதம் கூறுகிறார். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தீர்கள். முன்பிருந்தவர் எதுவும் செய்யவில்லை என, மரகதம் குமரவேலை வைத்துக் கொண்டே, ஆதவ் அர்ஜூனன் பேசிகிறார். ராஜினாமா செய்து விட்டு நின்றவர்கள், நிச்சயம் வெற்றி பெற கூடாது. என தெரிவித்தார்
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத் தலைவர் திரு த. ஜெய்கணேஷ் அவர்கள் ஏற்பாட்டில் முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் பரிசு பொருட்களை தாய் மார்க்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளை தெரிவித்து வழங்கினார்கள் . இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் நாகராஜ் மாவட்ட துணை தலைவர் பிளாஸ்டிக் குப்பன் மாவட்ட பரிவு தலைவர் பாஸ்கர் மண்டல் தலைவர்கள் ஹரிகிருஷ்ணன் கதிர் சுரேஷ் தேவன் மண்டல் அமைப்பாளர் பூபாலன் உள்ளிட்டவர் உடன் இருந்தனர்