கோவையில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன்களை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்ற ‘இன்னோவிஷன் அறிவியல் திறன் போட்டி
எம்.ஐ.டி.முன்னால் மாணவர்கள் சங்கத்தின் கோவை கிளை சார்பாக நடைபெற்ற இதில் பல்வேறு புதிய தொழில் நுட்ப மாதிரிகளை காட்சி படுத்தி பள்ளி மாணவர்கள் கவனம் ஈர்ப்பு
பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன்களை ஊக்குவக்கும் விதமாக மெட்ராஸ் தொழில் நுட்ப கல்லூரி முன்னால் மாணவர்கள் சங்கத்தின் கோவை சாப்டர் சார்பாக ‘இன்னோவிஷன் 2026’ அறிவியல் திறன் போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள கோவை பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது..
முன்னதாக இன்னோவிஷன் திறன் போட்டிகளை எம்.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் சுந்தர் ராஜன்,மற்றும் கோவை சாப்டர் ஒருங்கிணைப்பாளர்கள் பழனி முருகன்,வசந்தராஜா கோயமுத்தூர் பப்ளிக் பள்ளியின் தாளாளரும் எம்.ஐ.டி.முன்னால் மாணவருமான நிர்மலா ஆகியோர் துவக்கி வைத்தனர்..
‘சிறந்த நாளைக்கான அறிவியல்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற,. இதில் 5 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று, தங்களது புதுமையான அறிவியல் மாதிரிகள் மற்றும் புதிய தொழில்நுட்பக் கருத்துகளை காட்சிப்படுத்தினர்.
கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுவாக இணைந்து தங்களது அறிவியல் திறன்களை வெளிப்படுத்தும் வகையில்,புதிய தொழில் நுட்ப மாதிரிகளை காட்சி படுத்தினர்..
குறிப்பாக இயற்கை பேரழிவுகளால். பாதிப்படைந்தவர்களை தொழில் நுட்ப உதவியால் மீட்பது,வயதானவர்கள் அவசர காலத்தில் உதவி பெறுவதற்கான ஏ.ஐ.தொழில் நுட்பம்,தானியங்கி விதை தூவும் இயந்திரம்,என பல்வேறு மாதிரிகளை காட்சி படுத்தி கவனம் ஈர்த்தனர்..
இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த தொழில் நுட்ப மாதிரிகளுக்கு பரிசுகள் வழங்க இருப்பதாகவும்,மாணவர்களின் அறிவியல் திறன்களை பள்ளி பருவத்தில் இருந்தே ஊக்கமளிப்பதால் எதிர்காலத்தில் அறிவியல் தொழில் நுட்பத்தில் மாணவர்கள் சிறந்து செயல்பட இது போன்ற போட்டிகள் பயனுள்ளதாக இருக்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…