கோயம்புத்தூர் தாய்மார்கள் ஆரோக்கியம் & சிறுநீரக மருத்துவப் பொருள்களை இந்தியாவில் வணிகமயமாக்க ஃபெர்ரிங்க் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் கொரோனா ரெமெடீஸ் நிறுவனம் கைக்கோர்த்துள்ளது.

கொரோனா ரெமெடீஸ் நிறுவனமும், சுவிட்சர்லாந்து பன்னாட்டு உயிரி மருந்து குழுமமான ஃபெர்ரிங்க் ஃபார்மாசூடிகல்ஸ் நிறுவனமும் செய்து கொண்ட கூட்டாண்மை ஒப்பந்தம் அடிப்படையில், வித்தியாசமான மற்றும் புதுமையான தாய்மார்கள் ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக மருத்துவப் பொருள்களை வணிகமயமாக்கத் திட்டமிட்டுள்ளன..

இது குறித்து கொரோனா நிறுவனரும், செயல் இயக்குனருமான நீரவ் மேத்தா கூறுகையில் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு உயிரி மருத்துவக் குழுமத்தின் ஓர் அங்கமான ஃபெர்ரிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உலகத் தரமான மருந்துகளை இந்திய நோயாளிகளுக்கு வழங்கும் என்றார்,

பெண்கள் சுகாதாரப் பாதுகாப்புப் பொருள்களில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களுள் கொரோனா ஒன்றாகும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நரம்பியல், ஹார்மோன், வலி மேலாண்மை, சருமம், எலும்பு ஆரோக்கியம், அல்சர், ஊட்டச் சத்து ஆகியவற்றுக்கான மருந்துகளிலும் இந்நிறுவனம் வலுவாக உள்ளது. ஃபெர்ரிங்க் தயாரித்த தாய்மார்கள் ஆரோக்கியப் பொருள்கள் மீதான ஆய்வுகள் நிரூபிக்கப்பட்ட திறனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய நிலையில், பல நாடுகளில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன என கூறிய அவர் சிறுநீரகப் பொருள்கள் ஃபெர்ரிங்க் புதிய தொழில்நுட்ப தளத்தில் புதுமையான முறையில், மருந்தளவு சூத்திர முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், சிறுநீர்ப்பையின் தேவைக்கு அதிகமான தீவிர செயலாக்கம் மற்றும் ஆணுறுப்பு விறைப்பின்மை நோயாளிகளுக்கு மிகப் பெரிய பலனைத் தரும் என்றார்.

இப்பொருள்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ 778.30 கோடிகள் மற்றும் ஆண்டு வளர்ச்சி 27% ஆகும். புதுமையான பொருள்கள் அனைத்தும் நாடு முழுவதுமுள்ள கொரானா ரெமெடீஸ் நிறுவனத்தின் 1500+ அங்கீகரிக்கப்பட்ட ஸ்டாகிஸ்ட்கள் மூலம் விநியோகிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *