கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் வாங்கல் சாலையில் அமைந்துள்ள பாலம்மாபுரத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
இம்முகாமை பதினோராவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆண்டாள் என்கிற சி.தினேஷ் குமார் தலைமையில் தமிழக முதல்வரின் விரிவு படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் கீழ் கரூரில் கண் மருத்துவத்தில் 30 வருடங்களுக்கு மேலாக முதன்மை பெற்று இயங்கும் சோமசுந்தரம் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் தலைவலி, நீர் வடிதல், தூரப்பார்வை,கிட்ட பார்வை,கண் குறை இது போன்ற கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டன. பரிசோதனை பின்பு கண் பார்வை குறைபாடு காரணமாக உள்ள பொதுமக்களுக்கு மருந்துகள் வழங்கபட்டன. இம்முகாமில் மருத்துவமணை கண் மருத்துவர், செவிலியர்கள்,பொது மக்கள் ஏராளமாணோர் கலந்து கொண்டனர்.