கோவை மத நல்லிணக்கத்தை கெடுக்கும் புர்கா,பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி உள்ளிட்டா படங்களை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். கோவையில் அத்திரைப்படம் வெளியான அனைத்து திரையரங்குகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம், திரையரங்கு முற்றுகை ஆகியவை நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ள புர்கா, பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி உள்ளிட்ட படங்களை தடை செய்ய வலியுறுத்தி கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *