கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள்
மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி சோழபுரம் மின்வாரிய அலுவலகத்தில் உள்ளே புகுந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்த
புத்தூர் கிராமத்தில் மும்முனை மின்சாரம் மின்வாரிய அலுவலர்கள் வழங்காததால் சாகுபடி செய்த நெல் கரும்பு பணப்பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இதனால் கடந்த ஒரு வார காலமாக அரசு பரிந்துரை செய்த மும் முனை மின்சாரம் வழங்கவில்லை எனவும் கடந்த 29 ந் தேதி முதல் மின்சாரம் தடைபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் குடிநீர் மற்றும் விவசாய நிலங்களும் பாதிப்புக்கு உள்ளாகி பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்படுகிறது.மேலும் விவசாயிகள் கடன்களில் தத்தளித்து வருவதால், மும் முனை மின்சாரம் இல்லாமல் பயிர்கள் காய்ந்து விடும் அபாயம் உள்ளது என தெரிவித்து மின்வாரிய அலுவலகத்தில் உள்ளே புகுந்து முற்றுகையிட்டனர்.
அப்போது கிராம மக்கள் மும்மணி மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயி களிடம் மற்றும் கிராமவாசி
களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் விவசாயிகள் மற்றும் கிராம வாசிகள் கலைந்து சென்றனர். இதனால் மின்வாரிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *