தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிபட்டி கிராமத்தில் சுமார் 300 ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .

இந்த நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைச் சிறுத்தையின் கட்சியின் ஒருங்கிணைப்பில் புட்டிரெட்டிபட்டி பகுதியில் முகாம் கட்டமைப்பு மற்றும் முகம் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து விசிக்காவின் புதிய கொடிக்கம்பம் நடப்பட்டு கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வந்தது.

இந்த நிலையில் புட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி லட்சுமி கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று கூறி ஜே சி பி இயந்திரம் மூலம் கம்பத்தை முழுமையாக தோண்டி எடுத்து அப்புறப்படுத்தினார்

இதை அறிந்த முகம் செயலாளர் சிலம்பரசன் கொடிக்கம்பம் இருக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு பின்னர் கடத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு இது குறித்து தகவல் கூறினார்

பின்னர் ஒன்றிய செயலாளர் பாலையா தலைமையில் பொறுப்பாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் புட்டிரெட்டிபட்டி பகுதியில் விசிக கொடி இருந்த இடத்தில் தான் அமைக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்பு கோஷங்கள் எழுப்பினர்

பின்பு எளிமையாக இருந்த கொடிக்கம்பத்தை மீண்டும் பிரம்மாண்டமாக ஊராட்சி நிர்வாகம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்

இந்த நிகழ்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தயாளன் சிலம்பரசன், கிருஷ்ணன், அருண், ஒன்றிய நிர்வாகிகள் ராஜசேகர், அன்புமணி அன்பரசு, சிந்தைதமிழன், மாயவன், வேப்பிலைகுமரன், மடதைபாண்டியன், சந்தோஷ் ,செந்தில், ராமலிங்கம், உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *