கர்நாடக மாநிலம் தேர்தலையொட்டி, புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவாஜி நகர், காந்தி நகர், மற்றும் பெத்தராயனபுரம் தொகுதிகளில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, கடந்த ஒன்பது நாளாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார், மேலும் அமைச்சர் புதுச்சேரி பாஜக மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானாவிடம் தொகுதியின் கள நிலவரத்தை விவரித்தார், பிரச்சாரத்தில் திறன்பட செயல்பட்டு பணியாற்றிய அமைச்சருக்கு நிர்மல் குமார் சுரானா மற்றும் கர்நாடக மாநில கட்சியின் பொருளாளர் சுப்பண்ணா இருவரும் வெகுவாக பாராட்டினார்கள்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *