நாமக்கல்

தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் என். ஈ. சி. சி. துணைத் தலைவர் கே .சிங்கராஜ் தகவல்

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), மற்றும் தமிழ்நாடு கோழி பண்ணை உரிமையாளர் சங்கம் சார்பில்

கோழிப் பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டம், இன்று நாமக்கல் – கோஸ்டல் ஹோட்டலில் நடைபெற்றது.

(எள்.ஈ.சி.சி ) நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மண்டல துணைத்தலைவர் மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான கே. சிங்கராஜ் தலைமை தலைமையில் நடந்த . இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ், தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்ட முடிவில் என்.ஈ.சி.சி மண்டல துணைத்தலைவர் கே. சிங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

கடந்த, மே 1 முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.ஈ.சி.சி) ஒரு முட்டை கொள்முதல் விலையை அறிவிக்கிறதோ அந்த விலைக்குதான், பண்ணையில், முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும், அனைத்து கோழிப்பண்ணையாளர்களும், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்.ஈ.சிசி) அறிவிக்கும் விலைக்குத்தான் விற்பனை செய்கின்றனர்.

அதேபோல், வியாபாரிகளும், அந்த விலைக்குத்தான் கொள்முதல் செய்கின்றனர்.தமிழகம் முழுவதும், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.ஈ.சிசி)நிர்ணய விலைக்கு, பண்ணை கொள்முதல் விலை சரியான முறையில் போய்கொண்டிருக்கிறது.

இதனால் பண்ணையாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு முட்டைக்கான சரியான விலை கிடைக்கிறது.

கேரளா, கர்நாடகா மாநிலம் மற்றும் கன்னியாகுமாரி, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலம், மாவட்டங்களுக்கு முட்டை அனுப்பும்போது, தூரத்துக்கு ஏற்ப, போக்குவரத்து செலவு, ஏற்று, இறக்கு கூலி கணக்கிட்டு, அதற்கேற்றப விற்பனை விலையை கூடுதலாக நிர்ணயம்செய்து கொள்ள பண்ணையாளர்களுக்கு வாய்பு ஏற்படுத்தி உள்ளோம்

தற்போது நிர்ணயம் செய்துள்ள கொள்முதல் விலை, ஒரு முட்டை 465 பைசா. இது பண்ணையாளர்களுக்கு கட்டுபடியான விலையாக இல்லை. இருந்தாலும், மற்ற மாநிலங்களில் என்ன விலை நிர்ணயம் செய்கின்றனர் என்பதை அனுசரித்து,

இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கேரளாவுக்கு முட்டைகள் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடலில் மீன்பிடி தடைகாலம் என்பதாலும், தேவை அதிகரித்துள்ளதாலும், வெளிமாநிலங்களில் முட்டை விற்பனை 50 சதவீதம் உயர்ந்துள்ளது,எனவே இனி வரும் காலங்களில் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது என கே. சிங்கராஜ் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *