கடலூர், அக். 16:
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் இன்று (16.10.2026) வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் முன்னிலையில், செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்பினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா, மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைசெல்வன் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.