தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் தங்கிச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஏராளமான வெளிநோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மருத்துவச் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் சிறு குரு தொழில்துறை அமைச்சர் மதன்ராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் அமைச்சர்கள் மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர்கள் தற்காலிக செவிலியர்களுக்கு பணி சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருந்த அறைக்கு இன்வெர்ட்டர் இணைப்பு இருந்ததால் அதில் ஒரு சில மின்விளக்குகள் மட்டும் எரிந்தது இதனால் மருத்துவமனையின் சில பகுதிகள் இருளில் மூழ்கின.சுமார் 10 நிமிடங்கள் மின்சாரம் தடைப்பட்டதால் ஆய்வுப் பணிகள் பாதிக்கப்பட்டன.

சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மின்சாரம் மீண்டும் வந்ததைத் தொடர்ந்து, அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டபோதே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *