ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்


திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் “ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி” என்ற தமிழக அரசின் இரண்டு சாதனை குறித்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு பொதுப்பணிகள் (கட்டிடங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)துறை அமைச்சர் எ.வ.வேலு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜாஆகியோர் தலைமை வகித்தனர்


திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் “ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி” என்ற தமிழக அரசின் இரண்டு சாதனை குறித்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு பொதுப்பணிகள் (கட்டிடங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)துறை அமைச்சர் எ.வ.வேலு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜாஆகியோர் தலைமை வகித்தனர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி .ஏ.கே.எஸ்.விஜயன் அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை பிரதீப்யாதவ் மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வாரியத்தலைவர் உ.மதிவாணன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்
விழாவில்மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் “ஈடில்லா ஆட்சி ஈராண்;டே சாட்சி” என்ற தமிழக அரசின் இரண்டு சாதனை விளக்க கையேடு வெளியிடப்பட்டது


தொடர்ந்து, இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பிஎம்ஏஒய் (ஜி) ஆவாஸ் ப்ளஸ் திட்டத்தின் கீழ் ஆணையும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு முதிர்வு தொகைக்கான காசோலையும்மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 15 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டியும், கேசிசி எஸ்.எச்.ஜி திட்டத்தின் கீழ் 7 நபர்களுக்கு கடனுதவிக்கான காசோலையினையும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு 34 லட்சத்திற்கான காசோலையும் வருவாய்துறையின் சார்பில் 59 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணையும், சமூக பாதுகாப்புத் திட்டம் மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகை 25 நபர்களுக்கும், வேளாண்மைதுறையின் சார்பில் ஆறு பயனாளிகளுக்கு மின்கலத்தெளிப்பானும், நான்கு பயனாளிகளுக்கு தார்பாய்களும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஏழு நபர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரமும் இரண்டு நபர்களுக்கு விலையில்லா சலவை பெட்டியும், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிக்கான ஆணையும் என 159 பயனாளிகளுக்கு 1 கோடியே 83 லட்சத்து 4 ஆயிரத்து 886 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது
நிகழ்வில் தலைமைப்பொறியாளர் கட்டுமானம் (ம) பராமரிப்பு சந்திரசேகர்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு தனபால் வருவாய் கோட்டாட்சியர்கள்சங்கீதா (திருவாரூர்) செல்வி.கீர்த்தனா மணி (மன்னார்குடி) உள்ளிட்ட அரசு உயர்அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *