கடலூர்: ஆயுதபூஜையை முன்னிட்டு கடலூர் லாயர்ஸ் அசோசியேஷன் சங்கத்தின் சார்பில் ஆயுதபூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி G. சுபத்ராதேவி, சங்கத் தலைவர் இராமஜோதிவேல், செயலாளர் M.S. அறவாழி, துணைத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், இளையராஜா மஞ்சு, பொருளாளர் நாகசுந்தரம், இணைச் செயலாளர்கள் ஆனந்த், சரண்ராஜ் மற்றும் நூலகர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மூத்த வழக்கறிஞர்கள் ராம்சிங், ஜோதிலிங்கம், M.J. லெனின், பா. கிருஷ்ணராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், லாயர்ஸ் அசோசியேஷன் சங்க உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் குமாஸ்தாக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.
விழாவில் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பங்கேற்றனர்.