திருவண்ணாமலை

திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் அருகே உள்ள புனல்காடு கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பலநோய்கள் ஏற்படும் வகையில் குப்பை கிடங்கு அமைப்பதை எதிர்த்து தொடர்ந்து பல நாட்களாக போராடிவரும் புனல்காடு கிராம விவசாயிகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் கே.ஆர்.பாலசுப்ரமணியன் அவரது தலைமையில், மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் அப்பகுதி மக்களை சந்தித்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் கே ஆர் பாலசுப்ரமணியன் கூறுகையில்,ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய பயிர்களை விளைவிக்கக் கூடிய பசுமையான இடத்தை விஷ வாயுக்களை வெளிப்படுத்தக்கூடிய குப்பைகளை கொட்டி அப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இந்த விடியாத திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். மக்கும். குப்பை. மக்காத குப்பைகளை எப்படி கையாள வேண்டும் என்கின்ற மத்திய அரசின் நல்ல திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் இந்த விடியாத திமுக அரசின் காண்ட்ராக்டர்கள் மற்றும் திமுக காரர்கள் பயனடைவதற்காகவே திருவண்ணாமலை நகராட்சியில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து வரப்படும் குப்பைகள் அனைத்தையும் ஏதும் அறியாத அப்பாவி விவசாயிகளின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் நிலங்களுக்கு அருகில் புனல் காடு கிராமத்தில் கொட்டுவது வன்மையாக கண்டிக்கக் கூடியது.

இதுபோன்ற அவல நிலையை நிச்சயமாக பாஜக கட்சி அனுமதிக்காது, மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் பார்வைக்கு இதனை கொண்டு சென்று, மீண்டும் இந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து குப்பைகளை கொட்டுவதற்கு பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.

பசுமையான இந்த விவசாய நிலப் பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் மழைக்காலங்களில் விஷ நீர் ஊறி அருகிலுள்ள விவசாய நிலங்களில் கலந்து விவசாய நிலங்கள் பாதிப்படையும் ஏரிகள் மற்றும் ஆற்று நீர் மற்றும் குடிநீர் உள்ளிட்டவை பாதிப்படையும். இதனால் சுற்றி இருக்கும் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்படையும் எனவே இந்த நிலையை இந்த மாநில அரசு அனுமதிக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

இங்கு மீண்டும் குப்பைகளை தொடர்ந்து கொட்டினால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஒப்புதலுடன் பாஜக சார்பில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
இவ்வாறு தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *