கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த 19 நாட்களுக்கு முன்பு வெளியேறிய 5 யானைகளில் 2 யானைகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை பகுதியில் சுற்றி வருகிறது. யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது அதில் இரண்டு குழுவினர் யானை எந்த பக்கம் செல்கிறது. என கண்காணித்து வருகின்றனர். மற்றொரு 3 குழுவினர் யானை முகாமிட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும். பொதுமக்கள் யானையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து யானைக்கு தொந்தரவு செய்ததால் அது காட்டிற்குள் செல்ல முடியாமல் ஊருக்குள் நுழைந்த சுற்றி திரிந்து வருகிறது. இன்று காலை 2 யானைகளும், சவடிகுப்பம் பகுதியில் சுற்றி திரிந்தன. ஊருக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக முதுமலை சரணாலயத்தில் இருந்து உதயன், வில்சன் என்ற 2 கும்கி யானைகளும் பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை லாரி மூலம் இன்று காலை கொண்டுவரப்பட்டன. மேலும் யானை பாகன்கள் உடன் வந்துள்ளனர். கும்கி யானைகள் பயணம் செய்ததால் களைப்பாக உள்ளது. அந்த யானைகளை அதிகாலையிலேயே குளிக்க வைத்தனர். மேலும் தேவையான உணவு வழங்கப்பட்டது. இன்று மாலை அல்லது நாளை காலையில் காட்டு யானைகள் கும்கி யானை மூலம் விரட்டப்படும் என தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *