மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கோவில்பட்டி கிராமம் இங்கு கோவில்பட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராம மக்களால் ஒன்றிணைந்து வழிபடும் பழமையான காணப்படை அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புதிதாக கட்டுவதற்கு நிதி ஆதாரம் தேவைப்பட்டது

இதனால் கிராம மக்கள் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற நிதி உதவி செய்து இந்த கோவிலை கட்டும் பணியை துவங்கினர் இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு கோவில்பட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் துபாய் நாட்டில் கம்பி கட்டுதல் ,கொத்தனார் வேலை கார்பெண்டர் போன்ற பல்வேறு உடல் உழைப்பு சார்ந்த தொழிலுக்கு பணியாட்களாக சென்று வேலை பார்த்து வந்தனர் இந்நிலையில் தங்கள் கிராமத்திற்கு உதவுவதற்காக 2004 ஆம் ஆண்டு துபாயில் பணியில் இருந்த 19 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மாதம் 115 ரூபாய் வீதம் சேமிக்க முடிவு செய்தனர் இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இந்த கிராமங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த குழுவில் இணைந்து, தங்களது பங்கிற்கான தொகையினையும் கொடுத்து சேமித்து வந்தனர் இவ்வாறு வியர்வை சிந்தி சேமித்த பணம் 30 லட்சம் ரூபாயை தாண்டியது இதனை தொடர்ந்து தங்களது கிராமத்தில் உள்ள கோவிலை சிறப்பாக கட்டி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நிதி உதவி செய்ய துபாய் வாழ் தமிழர்கள் முடிவு செய்தனர்

இதனை தொடர்ந்து அவர்கள் கோவில் கட்டுவதற்கு 15 லட்சம் ரூபாய் சுற்றுச்சூழல் அமைப்பதற்கு 8 லட்சம் பேவர் பிளாக் தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் என மொத்தம் 30 லட்சம் ரூபாய்க்கு மேலான தங்களின் சேமிப்பு பணத்தை, காணப்படை அய்யனார் கோவிலுக்கு வழங்கினர்

இதனால் சிறப்பான உயர்ந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காணப்படிய அய்யனார் சுவாமியை தரிசித்து சென்றனர் இந்நிலையில் தங்கள் கிராமத்திற்கு தங்கள் கடின உழைப்பில் நிதியுதவி அளித்து சேமிப்பு நிதி உதவி அளித்த துபாய் வாழ் தமிழர்களுக்கு கிராமத்தின் சார்பாக கோவில்பட்டியில் உள்ள கலையரங்கில் கிராம மக்கள் முன்னிலையில் சால்வைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது .

இது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் எங்களைப் போன்று பல்வேறு கிராமங்களில் இருந்து வெளிநாடுகளில் வாழும் தொழிலாளர்கள் தங்களால் இயன்ற சிறு தொகைகளை சேமித்தாள் தங்களின் கிராமங்களில் கோவில்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவலாம் என இது மேலும் நம்பிக்கை ஊட்டுவதாக இந்த குழுவில் உள்ள துபாய் வாழ் தமிழர்கள் தெரிவித்தனர் குழுவில் தலைவர் செயலாளர் போன்றபதவிகள் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து சேமித்தது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *