மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

கூத்தாநல்லூர் அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே சேகரை கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் வீடற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சேகரை வருவாய் கிராமத்தில் நில எடுப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா உடன் வழங்க வலியுறுத்தியும், முன்னாள் முதல்வர் பெயரில் கலைஞர் நகர் என்று சேகரை கிராமத்தில் வைத்த பெயர் பலகையை அகற்றியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேகரை கிராமத்தில் தொடர்ந்து அப்பகுதிகிராம மக்களுக்கு பல்வேறு கட்ட போராட்டத்திற்க்கு உறுதுணையாக இருந்துவரும் விவசாயி செந்தில்குமார் மீது கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும்

சேகரை கிராமத்தில் தொடர்ந்து அரசு அதிகாரிகள் சட்டவிரோத நபர்களுக்கு துணை போவதை கண்டித்தும் இதனை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தலைமை முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் சாந்தி செல்வகுமார் மற்றும் தர்மலிங்கம் ஊராட்சி மன்ற உறுப்பினர் என
100க்கும் மேற்பட்டோர் கிராமத்தினர் குழந்தைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *