எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

2017 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பானது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் (18.5.2023) தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை இல்லை, தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஜல்லிக்கட்டு போட்டி இணைந்தது அல்ல என்ற கருத்தை ஏற்க முடியாது எனக்கூறி தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு வெளிவந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் மாடுபிடி வீரர்கள், மற்றும் திமுக கட்சியினர் வரவேற்பு அளிக்கும் வகையில் சிறப்பாக கொண்டாடினர்..

அதன்படி ராசிபுரத்தில் திமுக நகர கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் என்.ஆர். சங்கர், அவர்கள் தலைமையில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து தமிழக அரசு வாழ்க, தமிழக முதல்வர் வாழ்க, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வாழ்க என சந்தோஷ முழக்கமிட்டனர்…

இந்த நிகழ்வில் ராசிபுரம் நகர செயலாளர் என்.ஆர். சங்கர்,
பொருளாளர்அன்சர்,அவைத் தலைவர்வைத்தீஸ்வரன்,
துணைச் செயலாளர் ஆனந்தன்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கவுன்சிலர் விநாயகமூர்த்தி, மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள்பழனிச்சாமி,தமிழரசிகனகராஜ்,
சண்முகம் ,செல்வம்,பிரபாகரன்,கலைமணி,ஜெயமால், ரவிச்சந்திரன்,லதா பாலு,நிர்மலா கேசவன், மற்றும் தாயகம் சரவணன், தங்கதுரை,அமிர்தலிங்கம், கார்த்திக், முரளி, கிருஷ்ணராஜ், மோகன், கேசவன்,முன்னாள் வார்டு பிரதிநிதி, முன்னாள் வார்டு செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள், என பலர் இதில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *