எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

2009 மே மாதத்தில் உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் இணைந்து, தமிழீழத்தில் போராளிகளையும்,
தமிழீழ மக்களையும் என ஒன்றரை லட்சம் பேரை இனப்படுகொலை செய்த நாளை நினைவு கூறும் வகையில்,

14 ஆம் ஆண்டு,மே 18முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
இராசிபுரம் தமிழீழ உணர்வாளர்கள் சார்பில்,இராசிபுரத்தில்,
தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர் வி. பாலு, அவர்களின் தலைமையில் மேட்டுத் தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது..

நிகழ்வில்,உலக வல்லாதிக்க நாடுகளால் படுகொலைக்கு உள்ளானவர்களை நெஞ்சில் ஏந்தி,கஞ்சி உணவு வைத்து, மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செய்து, தொடர்ந்து
மெழுகுவர்த்திகளை ஏந்தி சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்..

மேலும் உயிரிழந்தவர்கள் பற்றி அனைவருக்கும் எடுத்துக் கூறினர்.இந்த நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்V. கைலாஷ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிநகரச் செயலாளர் எஸ். மணிமாறன், விவசாய அணி மாநில துணை செயலாளர்வி.சி.க. வைகறைசேகர், முன்னாள் கவுன்சிலர்
சுந்தரம்,முத்துக்காளிப்பட்டிகுமார்,சோமு,தமிழீழ உணர்வாளர்கள் திமுகபா.மோகன்தாஸ், திவிக நகர செயலாளர்
பிடல் சேகுவேரா, பெரியார் பற்றாளர்
ஆசிரியர் சுந்தரம்,பாலகிருஷ்ணன், சுப்ரமணி,பெரியார் கூட்டமைப்பு
இராமச்சந்திரன், தி.வி.க.வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர்
சுகுவளவன்,விசிகநகர துணைச் செயலாளர்
விஜயக்குமார்,வி.சி.க.மற்றும் பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *