நாமக்கல்

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட நகரப் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் கட்டணக் கழிப்பிடங்களில் சிறுநீர் கழிப்பதற்கு ரூ 8 கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து விடுதலைக் களம் கட்சி சார்பில் மே 19ஆம் தேதி காலை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விடுதலைக் களம் கட்சியின் அறிவிப்பை அடுத்து நாமக்கல் நகராட்சி ஆணையர் விடுதலைக் களம் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

அதன்படி இன்று மே 18ஆம் தேதி காலை நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையருடன் விடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் பேச்சுவார்த்தைக்கு சென்றார்

அப்போது நகராட்சி ஆணையர், ‘நாங்கள் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவை நீங்கள் கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் விடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜனுடன் நாமக்கல் தெற்கு மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், நாமக்கல் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், நாமக்கல் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்தோஷ் குமார், நாமக்கல் வடக்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மோகன் குமார், தலைமை நிலைய செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் நகராட்சி ஆணையரின் உறுதிமொழியை ஏற்று மே 19ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

நகராட்சி கொடுத்த வாக்குறுதி படி கழிப்பிட கட்டணம் குறைக்கப்படவில்லை எனில் விடுதலை களம் போராடத் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றுவிடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *