வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை தர்மராஜன்கோட்டையில் இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலையின் மேற்குபுறத்தில் கோம்பை கரட்டின் அடிவாரத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்த பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது.

101வது ஆண்டு வைகாசிவிசாகதிருவிழா நேற்றுகாலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றவிழாவையொட்டி பாலதண்டயுத பாணிக்கு சிறப்புஅபிஷேக, ஆராதனை, அர்ச்சனை, அலங்காரம் செய்யப்பட்டது. பின் கோவில்வளாகத்தில் கொடிமரத்தில் சேவல் கொடியேற்றி மயில் முன்பு சிறப்புபூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காப்புகட்டினர் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்ததிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாலாபிஷேகம் வரும் ஜுன் 2ந்தேதி வௌ;ளிக்கிழமை காலை 6மணிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்புள்ள மௌன குருசாமி மடத்திலிருந்து புறப்பட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து அலகுகுத்த பூக்குழி இறங்கி 3கி.மீ.துhரம் பாதயாத்திரையாக பக்தர்கள் சென்று பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.

இரண்டம்நாள் 3ந்தேதி சனிக்கிழமை மாலை 6மணிக்கு கோவிலிருந்து முருகன் பட்டுப்பல்லாக்கில் எழுந்தருளி புறப்பட்டு வல்லப கணபதி கோவிலில் வழிபாடு செய்து அம்பலகாரர்திருக்கண் வந்து அபிஷேகம் செய்து ஈ கள்ளர் திருக்கண் வந்து எழுந்தருளிஇரவு தங்கல். மூன்றாம் நாள் 4ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 6மணிக்கு சீர்பாதம் தாங்கிகளுக்கு பாத்தியப்பட்ட ஈகள்ளர் திருக்கண்ணிலிருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவில் அருகில் இராமலிங்கசேர்வை தானமாக வழங்கிய இடத்தில் வைத்து மல்லிகைமலர்களால் பூப்பல்லக்கு அலங்காரிக் கப்பட்டு பாலதண்டாயுதபாணி இரவு 12மணிக்கு மேல் நகாpன் முக்கியவீதிகளில் பல திருக்கண்களில் எழுந்தருளி பக்கதர்களுக்கு தரிசனம் செய்துவிட்டு விடியவிடிய வீதிஉலா சென்று மறுநாள் காலை 11மணிக்கு கோவிலைசென்று அடைகின்றார். 3 நாட்களும் தினந்தோறு இரவு நேரங்களில் ஆடல்பாடல், இசைக்கச்சேரி உள்ளிட்டகலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதன் ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள், வாடிப்பட்டி கிராமபொதுமக்கள் செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *