கோவை கொடிசியா வளாகத்தில் ப்ராபர்டி எக்ஸ்போ 2023 எனும் கட்டுமான தொழில் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கட்டுமான தொழில் சார்ந்த பல்வேறு துறையினர் ஸ்டால்களை அமைத்திருக்கின்றனர்.

இதனை வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் பார்வையிட்டனர். இதில் வீட்டுமனை வர்த்தகம் தொடர்பாக அனைத்து தகவல்களும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட findmyplots.com வெப்சைட் டிஸ்பிளே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து அந்த இணையதளத்தின் இயக்குநர் ஆதித்யன் கூறுகையில், findmyplots.com என்ற இணையதளத்தில், எம்ப்ளாயி மேனேஜ்மெண்ட், லே அவுட் மேனேஜ்மெண்ட், லீட் மேனேஜ்மெண்ட் என பக்கங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதிலே வீட்டு மனை அமைந்துள்ள இடத்தின் மேப், வரைபடம், புகைப்படம், வீடியோக்கள், கடன் தரும் வங்கிகள் வரை, மனை பதிவு மற்றும் ஒப்புதல் எண்கள், மனைக்கு அருகாமையிலுள்ள அத்யாவசிய இடங்கள் குறித்த விவரங்கள் என அனைத்தையும் ஒரே இடத்திலிருந்தவாறு இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். குறிப்பாக முதலீட்டாளர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் வீட்டுமனை வர்த்தக விவரங்களை பதிவிடலாம். இதில் வர்த்தகம் தொடர்பாக நேரடியாக வாடிக்கையாளர்கள், நுகர்வோர் கேள்வி கேட்க முடியும். அதற்கான பதிலை உடனடியாக இணையத்தில் பெற முடியும். வீட்டுமனை வாங்குவோர் ஒவ்வொரு வேலைகளுக்கும் பல இடங்களுக்கு, அலுவலகங்களுக்கு சென்று தகவல் தெரிந்துகொள்ள அதிக நேரம் செலவிட நேரிடும். ஆனால் இந்த இணையதளத்தி்ல், அனைத்து தகவல்களையும் எளிதாக அறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால்,இந்த தொழில் நுட்பம். வழக்கமான நடைமுறையில் செலவிடும் நேரத்தை விட 5 ல் 1 பங்கு நேரத்தை செலவிட்டாலே இதில் வீட்டுமனை குறித்த அனைத்து தகவல்களையும் அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *