டி. மகேஷ் செய்தியாளர் திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட குனிச்சி மோட்டூர் பகுதியில் ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் கவுண்டர்கள் சங்கர், வாசு, முன்னாள் ஊர் கவுண்டர்கள் முருகேசன், சுப்பிரமணி, ரவி, பெரியசாமி, சண்முகம், வெங்கடேசன், சம்பத் குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின.

இதனைத் தொடர்ந்து குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை ஓடி கடந்து வெற்றி பெற்ற காளைக்கு முதல் பரிசு 1லட்சம் ரூபாயும் இரண்டாவது பரிசாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மூன்றாவது பரிசாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் மொத்தம் 115 வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகளுடன் சேர்த்து தென்னங்கன்று வழங்கப்பட்டன. சுமார் 2000க்கும் மேற்பட்ட காளையர்கள் விழாவை கண்டு ரசித்தனர்.

இந்த எருது விடும் திருவிழா துறை சார்ந்த அதிகாரிகளின் முறையான அனுமதி பெறப்பட்டு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வட்டாட்சியர் சிவப்பிரகாசம் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு விழா நடைபெற்றன.

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி கே ராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இந்த விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *