திருச்சி காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் தேர்தல் -துறையூர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நேர்காணல்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் எம் எஸ் கே மஹாலில் துறையூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற திருச்சி புறநகர் புதிய மாவட்ட தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான நேர்காணல் மற்றும் துறையூர் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகாஜுர்னா மற்றும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனை பேரில் இந்திய தேசிய காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவரும் அமைப்பு சீரமைப்பு இயக்கம் மேலிட பார்வையாளருமான முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி புதிய மாவட்ட தலைவர் பொறுப்பிற்கு விருப்ப மனுக்களை பெற்றார்.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராமசுப்பு, சுரேஷ்,மாவட்ட தலைவர் கலைச்செல்வன்,வட்டார தலைவர் மாணிக்கம், மகளிர் அணி பியங்கா பட்டேல், மாவட்ட செயலாளர் பாண்டியன், முன்னாள் நகர தலைவர் புகழேந்தி, மாநில பொது குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட பொருளாளர் இளையராஜா, உப்பிலியபுரம் நகர தலைவர் சுப்பிரமணியன், மகளிர் அணி சகுந்தலா மற்றும் துறையூர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்