பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
பாமக வின் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த காடுவெட்டி குருவின் ஐந்தாவது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் வன்னியர்கள் மற்றும் பாமகவினரால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது
அதன் தொடர்ச்சியாக முன்னாள் பாமக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினரும் நிரந்தர வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் ஐந்தாவது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் குரு கனலரசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டி கிராமத்தில் நிரந்தர வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் ஐந்தாவது நினைவு தினம் மாவீரன் மஞ்சள் படையின் தலைவரும் மாவீரன் குருவின் மகனுமான குரு கனலரசன் அவர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் தொண்டர்களுடன் குருவின் நினைவிடத்தில் அவரது சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதில் அவரது தங்கை மற்றும் மைத்துனர் மனோஜ் வழுவூர் மணி மாவீரன் மஞ்சள் படையின் தொண்டர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு மாவீரன் காடுவெட்டி குருவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
இதேபோல் ஆண்டிமடத்தில் பேருந்து நிலையம் அருகில் மாவீரன் காடுவெட்டி குரு அவர்களின் திருஉருவ படத்திற்கு முன்னாள் வன்னியர் சங்க செயலாளர் க.வைத்தி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.