ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் சார்பாக பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை மருத்துவ முகாம் ஓஎன்ஜிசி சமுக பொறுப்புணர்வு திட்ட நிதி உதவியுடன்
திருவாரூர் ஒன்றியம் பழவனக்குடி ஊராட்சியில் மாபெரும் பொது மற்றும் கண் மருத்துவ முகாம் மதுரை மீனாட்சி மிசன்,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவனை சேர்ந்த மருத்துவ குழு உதவியுடன் நடைபெற்றது. திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா தலைமையில் நடைபெற்றது

மாபெரும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தொடங்கிவைத்தார் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பேசும்போது இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றும் மேலும் ஓஎன்ஜிசி இதேபோன்று பள்ளி குழந்தை களுக்கான கண் சிகிச்சை முகாம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


மேல்சிகிச்சை தேவைபடுவோர்
அரசு மருத்துவமனைகளை பயன் படுத்திகொள்ள வேண்டும் என்றார்.பொதுமக்களிடம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் பற்றியும் கேட்டறிந்தார்.

திருவாரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் பேசும்போது ஓஎன்ஜிசி நிறைய சமுக பொறுப்புணர்வு திட்டங்களை திருவாரூர் பகுதியில் செய்து வருவது பாராட்டுக்குரியது அந்த வகையில் இந்த முகாமும் சிறப்பாக இருப்பாதாக கூறினார்.


முகாமில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா ஓ.என்.ஜி.சி குழும பொது மேலாளர் மாறன்வட்டாட்சியர் நக்கீரன் வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரிமாவட்டஆட்சியரின் உதவியாளர் சரவணன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்

முகாமில் 371 பயனாளிகள் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்த அழுத்தம் ,சர்க்கரை தேவைபடுவோருக்கு ஈ.சி.ஜி எடுக்கப்பட்டது. முகாமில் மருத்துவ பரிசோதனையில் நோயாளியாக சிகிச்சை பெற்ற அனைவருக்கும் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

நடக்க சிரமப்படும் 40 முதியோர்களுக்கு ஊன்றுகோல் கைத்தடிகள் வழங்கப்பட்டது கண் மருத்துவ முகாமில்
கண்ணாடி தேவை படும் சுமார் 185 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக முகாமில் பழவனக்குடி ஊராட்சி தலைவர் இளவரசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.ஊராட்சி துணைத்தலைவர் ராஜசேகரன் ஒன்றிய கவுன்சிலர் பத்மப்ரியா செல்வகுமார்
ஓ.என்.ஜி.சி மருத்துவ அலுவலர் கனேஷ்குமார் ஏரியா மேலாளர் சரவணன் துனை பொது மேலாளர் வேணுகோபால்
சமுக பொறுப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர்
முருகானந்தம் ஒன்றிய கவுன்சிலர் பத்மப்ரியா செல்வகுமார். என் ஜி ஓ இயக்குனர் இளங்கோ ராஜரெத்தினம் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்

முகாமில் பழவனக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த
நானூருக்குமேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
முகாம் நிகழ்வின் இறுதியாகபொதுமேலாளர் மாறன் பேசுகையில் கடந்தவருடத்தில் பத்து முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது

இந்த முகாம்களில் குழந்தைகளுக்கான பங்களிப்பு குறைவாகஉள்ளது கண்டறியப்பட்டுள்ளது.எனவே மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலுக்கினங்க பள்ளிகுழந்தை களுக்கான பிரத்யோகமாக கண் சிகிச்சை முகாம் மற்றும் மருத்துவ முகாம் ஓ என் ஜி சிசார்பில் நடத்தப்படும் என உறுதியளித்தார்

முகாமை ஓஎன்ஜிசி க்காக கடலூரை சேர்ந்த முதியோருக்கான முதியோர் அமைப்பு ஏற்று நடத்தியது. ஒவ்வொரு பகுதிகளில் ஓஎன்ஜிசி இது போன்ற முகாம்களை மாதம்தோறும் நடத்தி வருவது என்பது குறிப்பிடதக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *