புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீனவ மக்களுக்கான முதியோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதியில் உள்ள மீனவ மக்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நல்லவாடு சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறும் அரசாணையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் தெய்வசிகாமணி பாஜக மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு,
ஞானசேகர், கிருஷ்ணமூர்த்தி, பாஜக மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் சக்திபாலன் , மாவட்ட பொதுச்செயலாளர் வடிவேல், கன்னியப்பன், அரிகிருஷ்ணன், வேலரசன், சண்முகம் , சக்திவேல் மற்றும் மனவெளி தொகுதி மீனவ கிராம பஞ்சாயத்தார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.