எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு முழுவதும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் சீனிவாசா சுப்பராய பாலிடெக்னிக் கல்லூரியில் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய திமுக பொறியாளர் அணி சார்பில் மாபெரும் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சி கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல சேது ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகள் இடையே சிறப்புரை ஆற்றினார். மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் ,மாவட்ட அவைத்தலைவர் கே ஜி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன் பஞ்சு குமார் மலர்விழி திருமாவளவன் நகர செயலாளர் தம்பி மா.சுப்ராயன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் கதிரவன் சிறப்பு திறவுகோல் பயிற்சியாளர் ரியாசுதின் சீனிவாசா சுப்பிராய தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.