இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, உத்திரகோசமங்கை அருகில் பூசேரி கிராமத்தில் புதுப் பொலிவுடன் அருள் பாலித்துக் கொண்டிருக்கும்,
ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் சுவாமிக்கு ஜீரணோத்தாரன, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா, சோமகிருது வருஷம், வைகாசி மாதம் 4ஆம் நாள் (18/05/2023) வியாழக்கிழமை முகூர்த்தக்கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.அதன் பிறகு மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மங்கல இசை, விக்னேஸ்வரர் பூஜை, கிராம சங்கல்பம், வாஸ்து சாந்தி, அங்குூரார்ப் பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்சனம்,
கட ஸ்தாபனம், யாகசாலைப் பிரவேசம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வைகாசி 17ஆம் நாள் (31/05/2023) புதன்கிழமை யந்திர ஸ்தாபனம், ரத்ன ப்ரதிஷ்டை, அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல் சிறப்பாக நடைபெற்றது. இரவு மஹா பூர்ணாஹுதி, தீப ஆராதனை நடந்தேறியது.

வைகாசி 18ஆம் நாள் (01/06/2023) வியாழக்கிழமை யந்திர ஸ்தாபனம், கடம் புறப்பாடு செய்வித்து, மூலஸ்தான ஶ்ரீ தர்ம முனீஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காலை மணி 08:45க்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் தர்ம முனீஸ்வரர் அருள் பெற்று மகிழ்ச்சியடைந்தனர். பிறகு காலை 11:00 மணியிலிருந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மற்றும் யாகசாலை பூஜை காலங்களில், வேத ஆகம தேவார, திருமுறை பாராயணம், ஆன்மீக பூஜை விளக்கங்கள் நடைபெற்றது .

ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கும்பாபிஷேகப் பெருவிழாவை சர்வ சாதகம் டாக்டர். சிவஸ்ரீ மனோகர் குருக்கள் ராமநாதபுரம் அரண்மனை அவர்கள், பொறுப்பில் அனைத்து பூஜை புனஷ்காரங்களும் சிறப்பாக செய்விக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *