திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனுக்களை கொடுத்தனர்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அவினாசி செயற்பொறியாளர் மின்சார வாரியம் அவினாசி தாலுக்காவிற்குட்பட்ட கிராமங்களில் உள்ள கானூர், கருவலூர், சேவூர் மின் பகிர்மான பகுதிகளில் மும்முனை மின்சாரம் சீரற்ற முறையில் விநியோகம் பயிர்கள் கருகி அழியும் சூழ்நிலை – அவசர நிலையில் மும்முனை மின்சாரம் சீராக வழங்கக் கோரி மனு.
திருப்பூர் மின் பகிர்மான கழகம் அவிநாசிக்குட்பட்ட கானூர் மின் பகிர்மான பகுதி. கருவலூர் மின் பகிர்மான பகுதி, சேவூர் மின் பகிர்மான பகுதிகளுக்கு உட்பட்ட பல கிராமங்களில் கடந்த 19.04.2024 முதல் விவசாய நிலங்களில் உள்ள மின் இணைப்புகளுக்கு சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்காததாலும், இரவு நேரங்களில் மும்முனை மின்சாரம் முழுமையாக வழங்காத்தாலும் குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டதாலும் இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழை.தென்னை கரும்பு, காய்கறி, மரவள்ளி என பயிரிடப்பட்டவைகள் முற்றிலும் கருகி வரும் சூழல் உருவாகியுள்ளது.


ஏற்கனவே கொடுத்து வரும் மின்சாரம் குறைந்த அழுத்த மின்சாரமாக அதுவும் சீர் இல்லாமல் எந்த நேரம் வருகிறது என்று தெரியாமல் எப்போது நிற்கும் என்று தெரியாமல் குறைந்த அழுத்த மின்சாரமாக வந்து கொண்டுள்ளது.

இதே நிலைமை நீடித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளதுவிவசாயிகள் பல வகையில் நிதி திரட்டி, கடன் பெற்று பயிர் செய்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தற்பொழுது முறையாக தண்ணீர் விநியோகம் இல்லாமல் கருகுவதை பார்த்து மிகுந்த வேதனைக்கு ஆட்பட்டு உள்ளார்கள்.

ஏற்கனவே பகலில் மிக அதிகப்படியான வெப்ப நிலை உள்ளதால் ஈரப்பதத்தை தக்க வைக்க நீர் நீர் விநியோகம் அவசியமான காலகட்டத்தில் மின்சார வாரியம் இப்படி உரிமை மின்சாரத்தை மறுப்பது நியாயமில்லை.

ஆகவே விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையில் தற்பொழுது
ஏற்படுத்தப்பட்டுள்ள விவசாயிகளின் மும்முனை மின்சார பிரச்சினைக்கு தீர்வு
கவும் -உரிமை மின்சாரத்தை விரைந்து வழங்கவும், குறைந்த அழுத்த மின்சார கிடைக்கவும்
விநியோகத்தை சீர் செய்யவும் அவசரநிலையில் எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *