கடலூர் மாவட்டம் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
கடலூர், மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வியோடு தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் கற்றல் கொண்டாட்டம் எனும் திட்டம் நமது மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பரதம் மற்றும் கிராமிய நடனப் பயிற்சி, மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி பயிற்சி, ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி. கலை மற்றும் ஓவியம் பயிற்சி, சதுரங்க விளையாட்டு பயிற்சி,பாடல் மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் ஆகிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 2025 முதல் நடத்தப்பட்டன.
சதுரங்க விளையாட்டு பயிற்சி மாவட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 672 மாணவ,மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக பள்ளி அளவிலும், ஊராட்சி அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான போட்டிக்கு 225 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
9 வயதிற்குட்பட்ட 64 மாணவ,மாணவிகளுக்கும், 11 வயதிற்குட்பட்ட 60 மாணவ,மாணவிகளுக்கும், 13 வயதிற்குட்பட்ட 67 மாணவ,மாணவிகளுக்கும், 17 வயதிற்குட்பட்ட 42 மாணவ,மாணவிகளுக்கும் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெறுபவர்கள் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தயார் செய்யப்படுவார்கள்.பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ்,மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், பள்ளி தாளாளர் நசியன் கிரிகோரி, கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.